கல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில
நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு
நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு
குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன்
பெயரில் 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்
பணி அனுபவம். பணிக்காலத்தில் புகாருக்கும், துறை ரீதியான நடவடிக்கையில்
சிக்கியிருக்க கூடாது. மாணவர் நலனில்
ஆசிரியர் பங்கு போன்றதகுதிகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக்
கல்வி அலுவலர் கொண்ட தேர்வுக் குழு, விண்ணப்பித்த மொத்த ஆசிரியர்களின்
தகுதியை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி, ஒன்று முதல் ஆறு வரை 'ரேங்க்'
வழங்கிய பட்டியலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கும். இதில் இருந்து கல்வி
மாவட்டம் வாரியாக உயர்நிலை மேல்நிலை, தொடக்கக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ
இந்தியன், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள்,
விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்படுவர்.
இந்த ஆண்டு 379 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சில அமைச்சர்கள், அதிகாரிகள்
சிபாரிசால் ௫,6வது, 'ரேங்க்' பெற்ற ஆசிரியரும், தேர்வுக் குழு
பரிந்துரைக்காத ஆசிரியரும் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நல்லாசிரியர் விருது தேர்வில் ஒவ்வொரு ஆண்டும்
சிபாரிசு சர்ச்சை எழுகிறது. தேர்வு குழுக்கள் பரிந்துரைக்காத சிலரும் இடம்
பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு மாவட்டத்தில், வருவாய் அலுவலரின்
(டி.ஆர்.ஓ.,) பள்ளி நண்பர் என்பதால், அவருக்கு விருது கிடைத்துள்ளது. ஒரு
மாவட்டத்தில், தகுதி இருந்தும் சங்க நிர்வாகி என்பதால் அவருக்கு
மறுக்கப்பட்டுள்ளது; இது எவ்விதத்தில் நியாயம். இப்பிரச்னை குறித்து
சிறப்புக் குழு நியமித்து விசாரிக்க வேண்டும், என்றனர்.
அமைச்சர் மாற்றம் எதிரொலித்ததா : முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்த
பட்டியலில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆக.,29ல்
கல்வி அமைச்சர் பெஞ்சமின் மாற்றப்பட்டார். புதிய அமைச்சராக பாண்டியராஜன்
ஆக.,30ல் பொறுப்பேற்றார்.
செப்.,2 மாலையில் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு
தேர்வானோர் பட்டியல், தபால் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செப்.,3 காலை விருது பெற்றோர் விபரம் வெளியிடப்பட்டது. ஆக.,29 முதல்
செப்.,2க்குள் இறுதி பட்டியலில் சிலரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சிலர்
பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...