Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய செய்தித்தாளிலிருந்து பென்சில் - தமிழர் சாதனை!

         நம்மில் பலர் பழைய செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், கோவையைச் சேர்ந்த விகாஷ் கந்தவேல் (40) என்பவருக்கு புதுமையான யோசனை தோன்றியுள்ளது. 
 
      பயன்படுத்தப்பட்ட செய்தித்தாள்களை பென்சிலாக உருவாக்கினார். மீதமுள்ள மறுசுழற்சி காகிதங்களை வைத்து, கோப்புகள், கோப்புறைகள், வருகை அட்டைகள், அடையாள அட்டைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பல பொருட்களை உருவாக்கியுள்ளார். இவை அனைத்தும் சாதாரண பிளாஸ்டிக் மற்றும் மரப்பொருட்களால் ஆன காகிதம் முதலிய எழுது பொருட்களை விட சில ரூபாய்தான் அதிகம். பொதுவாக ஒரு செய்திதாளில் இரண்டு பென்சில்கள் செய்ய முடியும். ஒரு பென்சிலின் விலை ரூபாய் ஐந்து. இந்த யோசனை, விகாஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தபோது ஏற்பட்டுள்ளது. அங்கு, செய்தித்தாள், அச்சு காகிதங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது. ‘செய்தி அச்சை பயன்படுத்தி காகிதத்தை தாயாரிப்பதை விட, மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நினைத்தேன். இந்த யோசனையை வைத்து தயாரிக்கத் தொடங்கினேன். ஆனால், ஆரம்பத்தில் மோசமாக தோல்வியடைந்தேன். வெற்றிகரமாக முதல் பென்சிலை செய்ய எனக்கு நான்கு மாதங்கள் ஆகியது’ என தெரிவித்துள்ளார். இந்த பென்சில்கள் செய்யும்போது பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதில், பென்சிலை எளிதாக கூர்மைப்படுத்தும் வகையில் செய்தித்தாள்களை ஒன்றிணைப்பது முக்கிய சவாலாக இருந்தது. ‘நான் அனைத்து விதமான செய்திதாள்களையும் வைத்து பரிசோதனை செய்து பார்த்தேன். இறுதியாக ஒரு சில தாள்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் பட்டப்படிப்பை முடித்த பின், தந்தையின் வணிகத்தில் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், புதுமையாகவும் இயற்கையை பாதிக்காத வகையிலும் ஏதாவது செய்ய விரும்பினேன். மேலும், இந்த பென்சில் தயாரிப்பில் சவாலாக இருந்தது பசை தான். ஏனெனில், பெரும்பாலான குழந்தைகள் பென்சில்களை வாயில் வைத்துக் கடிப்பார்கள். எனவே ரசாயனம் இல்லாத பசையைக் கொண்டு பென்சிலை உருவாக்கினேன். மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களின் தேவை நிறைய இருந்தாலும்கூட, தமிழகம் இதற்கு இன்னும் தயாராகவில்லை என தெரிகிறது. என்னுடைய பொருட்களைப் பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் விற்பதற்கு முயற்சி செய்தேன். அப்போது, சுற்றுச்சூழலுக்கு 100% பாதிப்பை ஏற்படுத்தாத பென்சில் என அனைவரும் பாராட்டினர். ஆனால், அவர்கள் மறுசுழற்சி காகிதத்தால் செய்யப்பட்ட பொருட்களை விட, மரப் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்தனர். ஆனால், மெதுவாக இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் மக்கள் இந்த பென்சிலை தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த பென்சிலை பரிசாக அளிப்பதற்கு வேண்டும் என இங்கிருந்து ஆர்டர் செய்கின்றனர்’ என தெரிவித்துள்ளர். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் பழைய மாணவர்கள் தங்கள் புகைப்படங்களை பென்சிலில் பயன்படுத்தி அதை நினைவுபொருளாக அளிக்க முயன்று வருகின்றனர். விகாஷ் செய்த முதல் பென்சில் அவரது 13 வயது மகள் சியாவுக்குப் பரிசாக அளித்துள்ளார். அவள் தான் அவருடைய முதல் விமர்சகர். பென்சிலை தவிர, நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மறுசுழற்சி நோட்டுப் புத்தகங்கள், சிடி, டிவிடி உறைகள், கோப்புகள் மற்றும் கோப்புறைகள் போன்ற அனைத்து வகையான பொருட்களும் உருவாக்கப்பட்டு அவை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. அவருடைய ஒவ்வொரு பொருட்களிலும் இயற்கையை காப்பாற்றுவோம்; பாதுகாப்போம் என்ற ஸ்லோகன் போன்ற செய்தி அச்சிடப்படுகிறது. அந்த செய்தி அவர்களை ஊக்குவிக்கும் என உறுதிப்படுத்தியுள்ளார்.




3 Comments:

  1. Really very great.it is useful for our country.all the best sir.

    ReplyDelete
  2. Super sir my hearty wishes

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive