இந்தியாவில் வருங்காலத்தில் கடல் வளம்
சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்பு கள் அதிகமாக உள்ளன என்று அமெரிக்க கடல்
மீன் சேவை நிறுவனத் தின் கடல் சூழல் ஆய்வாளர் மிருதுளா ஸ்ரீநிவாசன்
தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மக்கள்தொகை பெருக்கத்தின்
காரணமாக, பல்வேறு வழிகளில் நில வளம் குன்றி வரு கிறது. அடுத்ததாக மக்களின்
கவனம், கடல் வளத்தின் மீது திரும்பி யுள்ளது. முறையற்ற கடல் வள சுரண்டலால்,
அந்த வளமும் அழிவு நிலைக்கு சென்று வருகிறது. இதனால் மறைமுகமாக சூழலியல்
சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு, நாம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க
வேண்டியிருக்கும். மேலும் நாம் நிலத்தில் வாழும் யானை, புலி, சிங்கம்
போன்றவற்றை பாதுகாக்க பல்வேறு வன உயிரின சட்ட விதிகளை உருவாக்கி
இருக்கிறோம். அதேபோல கடல் வாழ் உயிரினங்களையும் பாது காக்க வேண்டியது நமது
கடமை. அதனால் கடல் வளம் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டியதும், கடல் வளத்தை
அளவோடு பயன்படுத்தி, அதை காப்பதும் தற்போதைய கால கட்டத்தின் அவசியமாக
உள்ளது.
எனவே கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன்
அதுகுறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
குறிப்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அது தொடர்பான
படிப்புகளை படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி வருகிறோம்.
அதற்காகவே இந்தியா வந்திருக்கிறேன். இங்கு பல பள்ளி மாணவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறேன். மேலும் அமெரிக்காவில் கிடைக்கும்
கடல் வளம் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பாக, இந்திய
மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டமும் உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கடல் வளம் சார்ந்த
படிப்பு அவசியம். இந்தியா 3 பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்ப நாடு.
இங்கு கடல் வளம் சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
உலக அளவில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநாடு
ஒன்றையும் வரும் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களில் வாஷிங்டனில்
நடத்த இருக்கிறோம் என்று மிருதுளா நிவாசன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...