தமிழகத்தில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்'
தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
அகில் இந்திய அளவில்
நடத்தப்படும், 'நெட்' தேர்வில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும்
வினாத்தாள் இருக்கும்; அதனால், தமிழில் வினாத்தாள் வழங்கும், செட் தேர்வையே
பலரும் எழுதுகின்றனர். தமிழகத்தில், பிப்., 20ல் செட் தேர்வு நடந்தது; 85
ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள் பங்கேற்றனர்.
ஆனால், ஏழு மாதங்களாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால்,
வேலைவாய்ப்புகள் இருந்தும், அவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலர்
உள்ளனர். குறிப்பாக, சமீபத்தில், இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்
பதவிக்கு, 192 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது. பள்ளிக்கல்வித்
துறையின், ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்லுாரிகளுக்கு, 272
விரிவுரையாளர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடந்தது.
மனோன்மணியம், பாரதியார் பல்கலைகளில், 150 இடங்களை நிரப்ப
அறிவிப்புவெளியாகியது. செட் தேர்வு முடிவு வெளியாகாததால், இந்த பணிகளுக்கு,
முதுநிலை பட்டதாரிகளால் விண்ணப்பிக்க முடியாமல் போய் விட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...