ஊத்துக்கோட்டை;அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட, 1ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 925
மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு
வரை, 335 மாணவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2வில், 590 மாணவர்களும்
படிக்கின்றனர்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திற்காகவும்,
முறையான ஒழுக்கங்களுக்காகவும் அனைத்து பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். ஆனால், ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லாததால்,
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஆங்கிலப் பாடத்திற்கு, 600
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், முறையான ஆங்கில அறிவு இன்றி,
பாதிக்கப்படுகின்றனர். இதே போல், 400 மாணவர்கள் பயிலும் வேதியியல்
பாடத்திற்கு, ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர் இல்லை. பொருளியல், வணிகவியல்,
கணக்குப் பதிவியல் பயிலும், 200 மாணவர்களுக்கு ஆசிரியர்களே இல்லை. இதன்
காரணமாக பிளஸ் 2 பொது தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும்
அபாயம் உள்ளது.
கடந்த முறை நடந்த கலந்தாய்வில், இந்த
பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
இங்கிருந்து நான்கு ஆசிரியர்கள் பணி மாறுதலால் சென்று விட்டனர். மேலும்,
இரு ஆசிரியர்கள் பல காரணங்களால் சென்று விட்டனர். மாணவர்களின் நலன் கருதி
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள
பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல் ஆகிய
பாடங்களை எடுத்து படிக்கும், 200 மாணவர்களுக்கு இதுவரை பாடம் நடத்த
ஆசிரியர் இல்லை. தற்போது காலாண்டு தேர்வில் பாடமே புரியாமல் என்ன பதில்
எழுதுவது என தெரியவில்லை. எதிர்காலம் இருண்ட நிலையில் உள்ளது. தற்போது வேறு
எந்த பள்ளியிலும் சேர முடியாத நிலை உள்ளது.மாணவர்கள்
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
மாணவர்கள் பள்ளி நேரங்களில் சாலையில் திரிகின்றனர். சிலர் அரசு வழங்கிய
இலவச பேருந்து அட்டையை பயன்படுத்தி பல இடங்களுக்கு சுற்றுகின்றனர்.
பள்ளியில் இவர்களை யாரும் கேட்பதில்லை போலும். மாவட்ட கல்வி அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெற்றோர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...