உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற வீரர், சேலம் மாரியப்பனுக்கு,
மத்திய, மாநில அரசுகள், 2.75 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள நிலையில்,
அதை தங்கள் வங்கியில், 'டிபாசிட்' செய்யும்படி, சில வங்கிகள்
வற்புறுத்துகிறது.
இதனால், அப்பகுதியினர் அதிருப்தியடைந்து உள்ளனர். பாரா
ஒலிம்பிக்கில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர்
மாரியப்பனுக்கு, மத்திய அரசு, 75
லட்சம் ரூபாயும், தமிழக அரசு, இரண்டு கோடி ரூபாயும் பரிசாக அறிவித்துள்ளன.
மேலும், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர், பரிசுகளை அறிவித்து
வருகின்றனர். அவர், இந்தியா திரும்பியவுடன், பிரதமர், தமிழக
முதல்வர் ஆகியோரை சந்தித்த பின், சொந்த ஊரான, சேலம் மாவட்டம்,
காடையாம்பட்டி அடுத்த, பெரியவடகம்பட்டிக்கு வரவுள்ளார். இதற்கிடையே, தேசிய
மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் பலர், மாரியப்பன்
வீட்டுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். அவர்கள், மாரியப்பனுக்கு
அறிவிக்கப்பட்ட பரிசு தொகையை, தங்களது வங்கியில் டிபாசிட் செய்யும்படி,
அவரது குடும்பத்தினரை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தங்கள் வங்கியில்
டிபாசிட் செய்தால், கார் இலவசமாக வழங்க உள்ளதாகவும், சில அதிகாரிகள் சலுகை
தெரிவித்து வருகின்றனர்.
தங்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வருவதற்குள், அவரது
குடும்பத்தினரிடம், 2.75 கோடி ரூபாயை, தங்கள் வங்கியில் டிபாசிட்
செய்யக்கோரி வற்புறுத்தி வருவது, பெரியவடகம்பட்டி மக்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...