இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24
வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு
எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது.
இந்த தேர்வுக்கு,
11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே
பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி,
யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை
தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை
தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி
பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும்,
முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில்
பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...