பிற மாநிலங்களில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது.
அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி; தஞ்சாவூர் மாவட்டம்,
தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், பண பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்
எழுந்தது. அதனால், இரு தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின், மே இறுதியில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ.,
சீனிவேல் இறந்தார்; இதன் காரணமாக, மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. சட்டசபை
உறுப்பினர் மறைவு காரணமாக, காலியாகும் சட்டசபை தொகுதிக்கு, ஆறு
மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருப்பரங்குன்றம்
தொகுதிக்கு, நவ., 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால், மற்ற மாநில
இடைத்தேர்தலுடன் சேர்த்து, இம்மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல்
நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது, ம.பி.,யில், ராஜ்யசபா எம்.பி., பதவி; தெலுங்கானாவில், சட்டசபை தொகுதிக்கு,
அக்., 17ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது; ஆனால்,
தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 'அடுத்த மாதம், உள்ளாட்சி
தேர்தல் நடப்பதால், இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை' என, தேர்தல்
கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...