ஃபேஸ்புக் அழிவில்லா ஒரு ராட்சதனாக உயர வளர்ந்து நிற்கிறது.
அனைத்து நாடுகளும் சில தேவைகளுக்காக, மார்க் ஜுக்கர்பெர்க்கிடம்
நட்புக்கரம் நீட்டி ரிக்வஸ்ட் கொடுத்து காத்திருக்கின்றன.
இந்த நிலையில்
அடுத்த கட்டத்தை அடைய முடிவெடுத்து தொடங்கப்பட்டது, ஃபேஸ்புக் சர்வருக்கான
தனி சேட்டிலைட் திட்டம். செப்டம்பர் 3ஆம் தேதி, பூமியின் சுற்றுவட்டப்பாதையில்,
ஃபேஸ்புக்கின் சேட்டிலைட்டான Falcon 9 ஏவப்பட இருந்தது. பலகட்ட
சோதனைகளையும் தேறிவந்த இந்த ராக்கெட், திடீரென நேற்று காலை 9 மணிக்கு
நடைபெற்ற சோதனையில் வெடித்துச் சிதறியது. 95 மில்லியன் டாலர் மதிப்புள்ள
இந்த ராக்கெட்டை பிரான்ஸைச் சேர்ந்த யூடெல்சட், 5 வருட ஒப்பந்தத்துக்கு
ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விற்றார். இவ்வளவு பெரிய நஷ்டத்துக்குப் பிறகு
ஃபேஸ்புக் நிறுவனம் இந்த திட்டம் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள் என்று
நினைக்கிறீர்கள். “இந்த நஷ்டத்தால் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கிறோம்.
ஆனால், உலக மக்கள் அனைவருக்கும் இண்டர்நெட் கிடைக்கவேண்டும் என்ற எங்களது
குறிக்கோளிலிருந்து பின்வாங்கமாட்டோம்” என ஃபேஸ்புக் நிறுவனம்
கூறியிருக்கிறது. மேலும், அதிக ஸ்பான்சர் விளம்பரங்களை ஃபேஸ்புக்கில்
கொடுத்து நம்மை வைத்துத்தான் காசு பார்க்கப்போகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...