உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில
விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பெறுவதில் இருந்து, ஓட்டுப்பதிவு முடியும்
வரை, 72 வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் படிவங்கள், உறைகள்
போன்றவை மாநில தேர்தல் ஆணையமே அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி
வைத்துள்ளது. மேலும் ஜெம் கிளிப், குண்டூசி, பிளேடு, சணல் கயிறு, துணி, மை
குப்பி வைக்கும் கோப்பை, தள்ளுகோல், தாள், சுவரொட்டி, முத்திரை மை என,
40க்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில்
கடந்த காலங்களில் விலை நிர்ணயத்தில் மாறுபாடுகள் காணப்பட்டன. இதனால் அவற்றை
கொள்முதல் செய்வதில் சில நடைமுறைகளை கடைபிடிக்க தேர்தல் நடத்தும்
அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. கொள்முதல் செய்யும் பொருட்களின் அதிகபட்ச
விலையை கலெக்டர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட கருவூல
அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் அடங்கிய குழுக்களே
நிர்ணயிக்க வேண்டும். இந்த தொகைக்கு மிகாமல் தேர்தல் பொருட்களை கொள்முதல்
செய்ய வேண்டும்; இதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது என, ஆணையம்
தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...