Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களின் வாழ்வு சிறக்கட்டும்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

    ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
       இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- "புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது' என உரைத்தவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்.
உன்னதமான ஆசிரியர் பணியில் ஈடுபட்டு, நாட்டின் குடியரசுத் தலைவராகி தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்து ஏழை, எளியோருக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
ஆசிரியர் நலன்களைக் காக்கும் அதிமுக அரசு: இதேவேளையில், ஆசிரியர் நலன் காக்கும் வகையில், பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு மேற்கொண்டுவருகிறது.
சென்னை, திருச்சியில் ரூ.6 கோடியில் 2 ஆசிரியர் இல்லங்கள், 74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது, மதுரை, கோயம்புத்தூரில் ஆசிரியர் இல்லங்கள் அமைத்திட ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு, அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம், ஆசிரியர் இடமாற்றலில் வெளிப்படையான கலந்தாய்வு உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
மாணவர்களுக்குக் கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றைப் போதிக்கும் ஆசிரியர்களின் பணியை பாராட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
பரிசுத் தொகை அதிகரிப்பு: நல்லாசிரியர்களுக்கு விருதோடு வழங்கப்படும் ரூ.5,000 ரொக்கப் பரிசானது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
அழிவில்லாக் கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive