தன் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை
வேண்டும் என்று கோரி, 13 வயது சிறுமி உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில்
லாவண்யா என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன் சொந்தக் கிராமமான
ஹேமாடல் கிராமத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை
கட்டித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை
உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த சிறுமிக்கு திறந்தவெளியில் மலம் கழிக்கச் செல்வது
ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற விஷயமாக இல்லை என உணர்ந்தாள். மேலும்,
வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் ஆபத்து இருப்பதால் இந்தப்
பழக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதமிருந்தாள். அப்போது அம்பேத்கர், காந்தி
ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்தாள். கர்நாடகாவைச் சேர்ந்த மாலம்மா
என்ற மாணவி கழிப்பறை வேண்டுமென உண்ணாவிரதமிருந்ததை முன்மாதிரியாக
எடுத்துக்கொண்டு, லாவண்யாவும் அதே அகிம்சை வழியில் உண்ணாவிரதத்தை
மேற்கொண்டாள் என்பது குறிப்பிடத்தக்கது. லாவண்யா கிராமத்தை உள்ளடக்கிய
ஹிரியூர் கிராமத்தில் 70 வீடுகள் உள்ளன. அதில் 135 குடும்பங்கள் வசித்து
வருகின்றன. இந்நிலையில், தும்கூர் என்ற கிராமத்தில் ஒரு பெண் திறந்தவெளியை
கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது யானை தாக்கி
உயிரிழந்துள்ளாள். ஆகையால், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருந்திருந்தால்
அந்தப் பெண் இன்று உயிரோடு இருந்திருப்பாள் என லாவண்யா குறிப்பிடுகிறார்.
லாவண்யாவின் உண்ணாவிரதத்தைக் கேள்விப்பட்ட ஹிரியூர் தாலுக்காவின்
எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி ஸ்ரீதர் பார்க்கர், லாவண்யாவின் கிராமத்தில்
கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்ட உத்தரவிட்டுள்ளார். இதற்கான
நிதியை கிராம நிர்வாகம் அளிக்கும். அனைத்து பொதுப்பிரிவினருக்கும் ரூபாய்
12,000 வழங்கப்படும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 15,000
வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Vazthugal Lavanya all the very best to u
ReplyDelete