கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இப்பள்ளிகளை அமைக்க போதிய அளவில் நிலம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது கிராமப் பகுதிகளில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்க 10 ஏக்கர்
நிலமும், நகர்ப்புறங்களில் 8 ஏக்கர் நிலமும், பெருநகரங்களில் 4 ஏக்கர்
நிலமும் தேவை என்று விதி உள்ளது. இந்த நில அளவை குறைத்துக் கொள்வது
தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தீவிரமாகப் பரிசீலித்து
வருகிறது. ஏனெனில், பள்ளிகளை அமைக்க போதிய அளவு நிலம் ஒரே இடத்தில்
கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.
நாட்டில் இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான கேந்திரீய வித்யாலயா பள்ளிகள்
உள்ளன. மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை அமைச்சகம் இப்பள்ளிகளைத் திறந்து வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...