வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய
நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு
அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து
உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 746 பள்ளிகளில் பயின்று வரும்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை
எடுப்பது என்பதை முடிவு செய்ய தமிழக அரசு குழுவுக்கு, வரும் அக்டோபர் 31ஆம்
தேதி வரை கால அவகாசம் வழங்குவதாகக் கூறினார். மேலும், தமிழக
பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக
வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதில் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மட்டுமின்றி, தனியார்
பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் நிலை குறித்தும் ஆராயப்பட வேண்டும்
என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...