தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
தற்போது இந்த அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த மாதம்
(அக்டோபர்) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை
திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்தல் செலவுக்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் கமிஷன்
அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு
வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு
ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட
உள்ளாட்சி அமைப்புகள் பட்டியல் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு:-
எஸ்.சி. (பொது):- நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலைநகர்.
எஸ்.சி. பெண்கள்:- ராணிப்பேட்டை, சீர்காழி,
திருத்துறைப்பூண்டி, வால்பாறை, ஊட்டி, சங்கரன்கோவில், பேரணாம்பட்டு,
குன்னூர், பெரம்பலூர்.
பெண்கள் (பொது):- ஆம்பூர், குடியாத்தம், திருவத்திபுரம்,
வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம்,
அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம்,
உடுமலைபேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம்,
விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, நாகர்கோவில்,
பத்மநாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தாங்கல், ராசிபுரம்,
திருவாரூர், செங்கோட்டை, துறையூர்.
வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம்,
செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை, மேட்டூர்,
கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை,
திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.
பொது:- தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம்.
பெண்கள்:- செங்கல்பட்டு, மதுராந்தகம்.
பொது:- திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.
எஸ்.டி. பெண்கள்:- நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி. (பொது):- நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள் (பொது):- காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம்,
புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...