ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அவர்களை ஐ பாட்டில்
விளையாட்டுகளை விளையாடச் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என ஒரு ஆய்வு
முடிவு தெரிவிக்கிறது.
அதன் முடிவுகள் பற்றி தலைமை ஆய்வாளர் ஜோனாதன் பட் தெரிவித்துள்ளதாவது:
ஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் ஒரு நரம்பு
மண்டல வளர்ச்சி தொடர்பான குறைபாடாகும். இதன் மூலம் குழந்தைகள்
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் உரையாடுவதில் பிரச்சினைகள்
உண்டாகும்.
இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம்
பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இதை சரி செய்வதற்கான பல்வேறு சேவைகளை பெற
வாய்ப்பு ஏற்படும்.
இந்த ஆராய்ச்சியை பொறுத்த வரை மூன்று முதல் ஆறு வரையுள்ள
ஆட்டிச பாதிப்புக்குள்ளான 37 சிறுவர்களை திரட்ட ப்பட்டனர். பின்பு
அவர்களிடம் 'மூவ்மெண்ட் சென்சார்கள்' பொருத்தப்பட்ட ஐபாட் உள்ளிட்ட
டேப்லெட்டுகளில் விளையாட்டுகளை விளையாடுமாறு பணிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களை கையசைவுகளை ஆய்வு செய்த பொழுது, அவர்கள்
டேப்லெட்டுகளை அதிக விசையுடன் பயன்படுத்துவதும், அவர்களின் கை நகர்த்தல்
முறைகளில், ஒரு குறிப்பிட்ட முறையில் விசையின் பயன்பாடு இருப்பதையும்
கண்டறிந்தனர்.
இதை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று கூறலாம்,. ஏனென்றால்
இதன் மூலம் கடுமையான மற்றும் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை முறைகளை நாட
வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால் இது தொடர்பாக இன்னும் பல ஆய்வுகளை செய்ய வேண்டி உள்ளது.
மேலும் இதன் எல்லைகள் என்ன என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள்
தேவைப்படுகிறது.
இவ்வாறு ஜோனாதன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...