அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள,
மூன்று இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி
வாரத்தில், 'மெகா கேம்பஸ்' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அண்ணா
பல்கலை சார்பில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வகை கேம்பஸ் வேலை
வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
இதில், முதல் கட்ட முகாமில், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், தினசரி நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது; பல்வேறு தனியார் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து, இம்மூன்று கல்லுாரி
மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் கட்டமாக, மெகா கேம்பஸ் வேலை வாய்ப்பு
முகாம், இம்மாதம் இறுதி வாரத்தில் நடக்கிறது; இதுகுறித்து, இரு
தினங்களுக்கு முன், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்த முகாமில்
பங்கேற்க விரும்பும், மூன்று கல்லுாரிகளை சேர்ந்த, இறுதியாண்டு மாணவர்கள்
மட்டும், நாளைக்குள் அந்தந்த கல்லுாரி வழியாக, 'ஆன்லைன்' மூலம்
விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் தேர்வு,
தொழில்நுட்ப தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பின் வேலை
அளிக்கப்படும். இந்த முகாமில், இன்போசிஸ், காக்னிசென்ட், டி.சி.எஸ்., ஆகிய,
மூன்று நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கின்றன.
இதற்கிடையில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, பல்வேறு தனியார் கல்லுாரி மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம், ஏழாவது பருவ தேர்வு முடிந்ததும், நவம்பர் இறுதி வாரத்தில் நடத்தப்படும்; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அந்தந்த தனியார் இன்ஜி., கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி கொள்ளலாம் என்றும், அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...