சேலம்
அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு
செப்டம்பர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு (சுழற்சி-1, சுழற்சி-2) புதிதாக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்-1, கணினிபயன்பாட்டியல்-11, விலங்கியல்-1, மனித உரிமைகள் துறை-1 ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணிகள் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...