ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள்
பின்தங்கிய நிலையில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணியில் இருப்பது ஐ.ஐ.டி.,
எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். தற்போது
நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்ததாக உயர்கல்வியில் இன்ஜினியரிங் படிப்பை
ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசை மற்றும் இலக்காக
உள்ளது. நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேரலாம். அதுபோல
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,)
கல்வி நிறுவனமும் புகழ் பெற்றது.
இவ்வளவு பெருமை மிக்க நமது ஐ.ஐ.எஸ்சி., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் ஆசிய
நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
பிரிட்டனின் முன்னணி செய்தி நிறுவனமான 'ராய்ட்டர்ஸ்' ஆசியாவின் சிறந்த பல்கலைக்
கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 75 கல்வி
நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா எத்தனை:
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்
பெற்றுள்ளது. ஐ.ஐ.டி., 72வது இடத்தையும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., (இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) 73வது இடமும் பெற்றுள்ளது.
என்ன காரணம்
இந்தியாவின் சிறந்த ஐ.ஐ.டி.,களான மும்பை மற்றும் டில்லி ஆகியவை இந்த
பட்டியலில் உயர்ந்த இடத்தை பெற்றிருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழகங்கள்
என்று கணக்கிடும் போது, இந்தியாவில் அனைத்து ஐ.ஐ.டி., களையும் இணைத்து ஒரே
பல்கலைக்கழகமாக வைத்து ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி, மும்பை
ஐ.ஐ.டி.,களுடன் புதிதாக துவக்கப்பட்ட ஐ.ஐ.டி.,களையும் சேர்க்கும் போது,
சராசரி குறைந்து கடைசி இடமே
கிடைத்துள்ளது.
23: இந்த 75 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அதிகபட்சமாக சீனாவின்
23 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா
20, ஆஸ்திரேலியாவில் 6, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தலா 2,
நியூசிலாந்து 1 என இடம்பெற்றுள்ளன.
டாப் - 10 பல்கலைக்கழகம்
சிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த 17 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1) கே.ஏ.ஐ.எஸ்.டி., பல்கலைக்கழகம், தென் கொரியா
2) டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
3) சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென் கொரியா
4) ஒசாகா பல்கலைக்கழகம், ஜப்பான்
5) போஹங் பல்கலைக்கழகம், தென் கொரியா
6) டேஹோகு பல்கலைக்கழகம், ஜப்பான்
7) கியோட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
8) சுங்யிங்வான் பல்கலைக்கழகம், தென் கொரியா
9) யோன்சி பல்கலைக்கழகம், தென் கொரியா
10) கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...