உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினரின் விருப்ப
மனுவில், ஜாதி சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு
உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினர், நேற்றிலிருந்து நல்ல
நேரம் பார்த்து, விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள மனு படிவத்தில் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தற்போது
வகிக்கும் பதவி, கட்சியில் இணைந்த ஆண்டு உள்ளிட்ட, 20 கேள்விகள்
கேட்கப்பட்டுள்ளன.
அவற்றின் விபரம்:
* நீங்கள் போட்டியிடும் பகுதியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும்
ஒவ்வொரு சமூகத்தினரின் சுமாரான வாக்காளர் எண்ணிக்கை விபரம்?
* தாங்கள், குறிப்பிட்ட பதவிக்கு போட்டியிட முக்கிய காரணம் என்ன?
* தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
* கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு, சிறை சென்றிருக்கிறீர்களா ?
* கட்சித் தலைமை, தங்கள் மீது, 'நீக்கம்' போன்ற ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் மேற்கொண்டுள்ளதா?
* எப்போது, எதற்காக நீக்கப்பட்டீர்கள் என்ற விபரம்?
* தங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு ஏதாவது நிலுவையில் உள்ளதா அல்லது ஏதேனும் தண்டனை பெற்றவரா?
* ஜாதி அமைப்புகள் அல்லது சங்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளீர்களா?
இத்தனை கேள்விகளையும் கேட்கும் அந்த விருப்ப மனுவில், 'தாங்கள் எந்த
சமூகத்தை சேர்ந்தவர்? அதற்கான ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக இணைக்க வேண்டும்'
என்பது போன்ற முக்கிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...