அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்: சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் ஆகிய இருபாலரும் வரும் 23 -ஆம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இதைத்தொடர்ந்து, இந்தப் பயிற்சிகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி, வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444902522, 9841112566, 9514856899, 9443278915 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...