இந்தியாவின் மொத்த சேமிப்பு விகிதம் குறைந்து
வருவதாகவும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டி.பி.எஸ்.,
அறிக்கை தெரிவிக்கிறது.
முதலீட்டிற்கு உள்நாட்டு சேமிப்பு அவசியம்
என கருதப்படுகிறது. இல்லை என்றால் இதற்காக வெளிநாட்டு முதலீடுகளை
அதிகம் சார்ந்திருக்க வேண்டும். இந்நிலையில் சர்வதேச நிதியம் தகவலின் படி, இந்தியாவின் மொத்த சேமிப்பு உள்நாட்டு உற்பத்தியில், 31 சதவீதமாக குறைந்துள்ளது.
2007 முதல் 2008ம் ஆண்டு காலத்தில் இது, 37 சதவீதமாக இருந்தது. குறைந்த
வருமானம், சிக்கலான பொருளாதார சூழ்நிலை, வட்டி குறைவு உள்ளிட்டவை
இதற்கான காரணங்களாக அமைந்துள்ளதாக டி.பி.எஸ்., அமைப்பின் அறிக்கை
தெரிவிக்கிறது. இந்த போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லை
என்றால் அந்நிய முதலீட்டின் தேவை அதிகரித்து நடப்பு கணக்கு
பற்றாக்குறையை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற
நாடுகளைப்போல அல்லாமல், இந்தியாவில் பணிபுரியும் வயதில்
உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது சாதகமான அம்சமாக
அமைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...