'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சாற்றல்
பயிற்சி அளிக்கப்படும்,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி
அறிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
டிரைவர்கள், சுய வேலைவாய்ப்பு பெற, 960 டிரைவர்களுக்கு, கனரக வாகனப்
பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தாட்கோ சிறப்பு மைய திட்டம் மற்றும் திறன்
மேம்பாட்டு திட்டத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச, எழுத, 11 மாத பயிற்சி
அளிக்கப்படும்; இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய சிறப்பு திட்ட நிதியில்
இருந்து, 34 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...