புதுக்கோட்டையில், கல்லுாரி
மாணவர், தன் கட்டைவிரல் நகத்தால், 9.98 கிலோ எடையை துாக்கி, கின்னஸ் சாதனை
படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த பிரதாப்,
கீரனுார் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்து
வருகிறார். இவர், தன் கட்டைவிரல் நகத்தால் இரும்பு ராடுகளை துாக்கி,
கின்னஸ் சாதனை படைக்க இரண்டு ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று கின்னஸ் புத்தக நிறுவன
பார்வையாளர், டிராகன்ஜெட்ல் முன்னிலையில் பிரதாப் சாதனை படைக்கும்
நிகழ்ச்சி நடந்தது.தன் கட்டைவிரல் நகத்தால், 9.98 கிலோ இரும்பு ராடை
துாக்கிய பிரதாப், அதை, 50 வினாடிகள் வரை நிலை நிறுத்தினார்.இதன் மூலம்,
முந்தைய சாதனையான, 8.66 கிலோ துாக்கியிருந்ததை முறியடித்து, புது உலக
கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற
உள்ளது. பிரதாபை, ரோட்டரி தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், சான்றிதழ்
மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...