புது தில்லி : ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் இல்லை என்ற
முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், சுமார் 90 ஆண்டு காலமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் நடப்பு நிதியாண்டு வரை சுமார் 90 ஆண்டு காலத்துக்கும் மேலாக ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
ஒரு ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர் என்று அழைக்கப்படும். இதில், இரண்டு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்படும். ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்தார். அதன்பிறகு பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.
ஆனால், இனி பொது பட்ஜெட்டுடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்பதால், இரண்டு பட்ஜெட்டையும் சேர்த்து மத்திய நிதியமைச்சர் தான் தாக்கல் செய்வார்.
ஆங்கிலேய ஆட்சி காலம் முதல் இருந்து வந்த இந்த நடைமுறை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் மாற்றப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றம், 'விரைவில் நிர்வாக அடிப்படையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வருவேன்' என்று பிரதமர் மோடி கூறியதன் முதல் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
இரண்டு பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்படுவதால் மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக நிதிச்செலவு அதிகமாக இருக்கிறது. எனவே, செலவை குறைத்து, பணத்தை மிச்சப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி: திணமணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...