எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திங்கள்கிழமை (செப்டம்பர் 26) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 8.42 மணிக்குத் தொடங்கியது.
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவது உள்பட பணிகள் நிறைவடைந்துள்ளன.
பி.எஸ்.எல்.வி. சி 35 ராக்கெட்டில் "ஸ்கேட்சாட்-1' உள்பட 3 இந்திய செயற்கைக்கோள்கள், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்புகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ).
அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும்.
"ஸ்காட்சாட் 1' செயற்கைக்கோள் துருவ - சூரிய சுற்றுவட்டப்பாதையிலும், மற்ற செயற்கைக்கோள்கள் துருவ சுற்றுவட்டப்பாதையிலும் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்திய ராக்கெட் ஒன்று இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறையாகும்.
இரு சுற்றுவட்டப்பாதைகளில் ராக்கெட் பயணிக்க வேண்டியிருப்பதால் இதன் பயண நேரம் இரண்டே கால் மணி நேரமாக இருக்கும். மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிடமாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...