பிஎஸ்என்எல் தனது புதிய
வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை
அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1
ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.
பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்த்தின் முழு
விபரம் என்ன..? இதை எப்படி பெறுவது..? இதை பெற என்ன என்ன ஆவணங்கள் தேவை..?
போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். உடன் பிஎஸ்என்எல்-ன் பிற பிராட்பேண்ட்
திட்டங்கள், 3ஜி / 4ஜி திட்டங்கள், மற்றும் பிஎஸ்என்எல் அன்லிமிடட்
திட்டங்கள் சார்ந்த விளக்கப்படமும் தொகுக்கப்பட்டுள்ளது.
பிபி249 திட்டத்தை பெறுவது எப்படி.?
வழிமுறை 01
18 வயதுக்கு மேல் நிரம்பியவராக இருக்க
வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சரியான அடையாள அட்டை
வேண்டும் (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை , நிரந்தர கணக்கு எண்
அட்டை)
வழிமுறை 02
உங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு
அருகாமையில் உள்ள உள்ளூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராந்திய
அலுவலகத்திற்கு சென்று, உங்கள் வீட்டிற்கு பிபி249 திட்டம் பெற வேண்டும்
என்று கூறி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், பின் அது சரிபார்க்கப்படும்.
வழிமுறை 03
இறுதியாக, 6 மாதங்களுக்கு ரூ.249 என்ற கட்டண தொகையை செலுத்த வேண்டும், ஆக்டிவேஷன் நிகழ 1 வார காலம் ஆகக்கூடும்.
வரம்பற்ற பிபி249 திட்டத்தின் நன்மைகள் :
1. வெறும் ரூ249-ல் 6 மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு
2. 6 மாதங்கள் இந்தியா மூக்குக்கு வரம்பற்ற இலவச லேண்ட்லைன் மற்றும் மொபைல் அழைப்புகள்.
பிற தகவல்கள் :
1. இந்த திட்டம் செப்டம்பர் 9, 2016-ல் இருந்து கிடைக்கப்பெறும்.
2. முக்கியமாக புதிய பயனர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தை பெற முடியும்.
பிபி 249 திட்டத்தின் முக்கிய விதிமுறைகளும்,
நிபந்தனைகளும் :
1. இரண்டு எம்பிபிஎஸ் (MBPS) வேகத்தில் வரம்பற்ற 2ஜி தரவு பயன்பட்டை பெறுவீர்கள்.
2. 6 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் இதே திட்ட நன்மைகளை பெற ரூ.799 பிபி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3. ஞாயிறன்று மட்டுமே வரம்பற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
4. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலாக இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்.
விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.
விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.
விளக்கப்படம் 3 :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...