'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள
முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்'
என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளர்களின், பூத்
ஏஜன்ட்டுகள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில்,
ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், உறுதிமொழி ஏற்க வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது.வாக்காளர், எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்துள்ளார்
என்பதைநேரடியாகவோ, மறைமுகமாவோ தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது; அவற்றை,
முறையற்ற வழிகளில் தெரிந்து கொள்ள முயற்சிக்கும், ஓட்டுச்சாவடி ஊழியர்கள்
அல்லது பூத் ஏஜன்ட்டுகளுக்கு, ஆறு மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
சேர்த்து விதிக்கப்படும் எனவும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...