சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு,
மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டு உள்ளது.
உத்தரவு :
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் மே, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...