தமிழக அரசின் பொது மற்றும் சமூகப்பிரிவு தொடர்பான இந்திய கணக்காய்வு
மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் (2015 மார்ச் முடிய) கூறப்பட்டு
இருப்பதாவது:
சேலம், விழுப்புரம், திருவண்ணா மலை, தஞ்சாவூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல்,
திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் 2010-12-ல் தரம் உயர்த்தப்பட்ட 83 அரசு
பள்ளிகளில் 58 பள்ளிகள் கட்டிடம் கட்டுவதற்கு சொந்த இடம் இல்லாமலேயே தரம்
உயர்த்தப்பட்டிருப்பது ஆய்வின் போது தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு
அக்டோபர் மாதம் வரை இந்த பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
மேலும், உயர்நிலைப் பள்ளி கட்டிடங் கள் கட்டப்படாத காரணத்தினால் 56
பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. வகுப்புகள்
திறந்தவெளியிலும் அதாவது தாழ்வாரங்கள், மரத்தடி, சைக்கிள் நிறுத்துமிடம்
போன்ற இடங்களிலும் தடுப்பு போட்டு பிரித்த பகுதிகளில் நடத்தப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...