தமிழ்நாடு அறிவியல் மையத்தின், கவுன்சில்
கூட்டம், நான்கு ஆண்டுகளாக கூட்டப்படாததால், அறிவியல் மைய பணிகள் முடங்கி
உள்ளன.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், 1983ல், தமிழக அரசால்
துவங்கப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தில், பதிவு
செய்யப்பட்டுள்ளது. சேவை அடிப்படையில், செயல்பட வேண்டும் என்பதால், இந்த
சட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
மையத்திற்கு, அதிக
அளவில், நன்கொடை நிறுவனங்கள் கிடைத்தன. சில ஆண்டுகளாக, புதிய அரங்கம்
அமைக்கவும், இருக்கும் அரங்கங்களை பராமரிக்கவும், ஸ்பான்சர் கிடைக்காமல்,
அறிவியல் மையம் திணறுகிறது. அரசு ஒதுக்கும் நிதி, அதிகாரிகளின் சொகுசு
பயணம், தினசரி செலவுகளுக்கு, பயன்படுத்தப்படுவதால், பொது தணிக்கைக்கு,
அவர்கள், முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில்,
அறிவியல் தொழில் நுட்ப மையத்தின், கூட்டுறவு சட்டப்படியான, கவுன்சில்
உறுப்பினர்கள் கூட்டம், நான்கு ஆண்டுகளாக கூடவில்லை. உயர் கல்வித்துறைக்கு,
புதிய அமைச்சர் பொறுப்பேற்ற நிலையில், அவரே கவுன்சிலின் தலைவர் என்பதால்,
அதற்கான அறிமுக கூட்டம் கூட நடக்கவில்லை.
இதுகுறித்து, அறிவியல் மைய வட்டாரத்தினர்
கூறுகையில்,'கவுன்சில் கூட்டத்தை கூட்டினால், நிதி கணக்கை தாக்கல் செய்ய
வேண்டும்; கவுன்சில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு ஏற்ப, வெளிப்படையான
நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதால், கூட்டத்தை நடத்துவது இல்லை. விதிப்படி,
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கூட்டம் நடத்த வேண்டும்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...