குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,
தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி
நாளாகும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) குரூப்
4 பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 5,451
காலிப் பணியிடங்களை நிரப்ப, வரும் நவம்பர் 6 -ஆம் தேதி தேர்வு
நடைபெறவுள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்க சுமார் 13 லட்சம்
பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு
புதன்கிழமையுடன் (செப்.14) முடிவடைந்துள்ளது. இந்த நிலையில்,
விண்ணப்பித்தவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வெள்ளிக்கிழமை கடைசி
நாளாகும்.
வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலமாக தேர்வுக் கட்டணமான ரூ.75-ஐ செலுத்த வேண்டுமென டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்திலேயே வெளியிடப்படும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...