உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக இன்று வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில்
நடக்க உள்ளது. அதற்கான தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
ஆனால், கிட்டதட்ட 3,970 பணியிடங்கள் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக
உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி அரசு நடத்த போகிறது
என்னும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள்.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது அவர், “கருஊரக வளர்ச்சித்துறையில்
உதவியாளர்கள் 5,563 பேர்; இளநிலை உதவியாளர்கள் 3,137 பேர்; சுருக்கெழுத்து
தட்டச்சர் 182 பேர்; தட்டச்சர் 1,042 பேர் மொத்தம் 9,924 பேர். இவர்களில்
3,970 பணி இடங்கள் காலியாக இருக்கிறதாம். இந்த ஆட்சியில் எந்த துறையில்தான்
காலிப்பணி இடங்கள் இல்லாமல் இருக்கின்றன? 9,924 பணியிடங்களில் 3,970
பணியிடங்களை காலியாக வைத்துக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்துவது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...