வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கை யாளர்கள், இம்மாத
இறுதிக்குள், வங்கி மற்றும் காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் அடங்கிய அட்டை
நகல் தராவிட்டால், மானியம் நிறுத்தப் படும்;அட்டை நகல் கொடுத்தால் தான்
மானியம் கொடுப்பது தொடரும்.
யாளர்கள், சந்தை விலையில் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான்
பெட்ரோலிய நிறுவனங்களில், 1.67 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கை யாளர்கள் உள்ளனர்.நேரடி மானிய திட்டத்தில் இணைய, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகலை, காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் வழங்க
வேண்டும். ஆரம்பத்தில், பலரிடம் ஆதார் அட்டை இல்லாததால் வங்கி புத்தக நகல் மட்டும் பெற்று,மானிய திட்டத்தில்
சேர்க்கப்பட்டனர்.
பெட்ரோலிய நிறுவனங்களில், 1.67 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கை யாளர்கள் உள்ளனர்.நேரடி மானிய திட்டத்தில் இணைய, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகலை, காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் வழங்க
வேண்டும். ஆரம்பத்தில், பலரிடம் ஆதார் அட்டை இல்லாததால் வங்கி புத்தக நகல் மட்டும் பெற்று,மானிய திட்டத்தில்
சேர்க்கப்பட்டனர்.
தற்போது, காஸ் சிலிண்டர் மானிய திட்டத் திற்கு, ஆதார் அட்டை
விபரத்தை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. 1.67 கோடி வாடிக்கை
யாளர்களில், 1.28 கோடி பேர் மட்டுமே ஆதார் நகலைவழங்கி உள்ளனர். மீதமுள்ளோர்
இம்மாத இறுதிக்குள், வங்கி மற்றும் ஏஜன்சி களில் ஆதார் நகலை தர வேண்டும்;
இல்லை யெனில், காஸ் மானியம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில், ஆதார் அட்டை நகல்
தராதவர்கள், இம்மாத இறுதிக் குள் தர வேண்டும். வரும், 30ம் தேதிக்குள்
வழங்கினால், மூன்று மாதங்களுக்கான மானியமும் சேர்த்து வழங்கப்படும்; நகல்
தராதோருக்கு மானியம் ரத்து செய்யப்படும். எப்போது ஆதார் விபரம் தருகின்றனரோ
அன்று முதல் மானியம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் அட்டை!
இனி, ஐந்து வயதுக்கு குறைவான. குழந்தைகளுக்கும், 'ஆதார்' எண்
எடுத்து கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு, கை
ரேகை, கண் கருவிழி பதிவு தேவையில்லை; முகத்தை மட்டும் புகைப்படம் எடுத்து,
பெற்றோரில் ஒருவரது ஆதார் எண் அடிப்படையில், தனி ஆதார் எண் வழங்கப்படும்.
ஆதார் திட்ட தமிழக கண்காணிப்பு அதிகாரி யும்,மக்கள் தொகை
பதிவு இணை இயக்குன ருமான, எம்.ஆர்.வி. கிருஷ்ணா ராவ் கூறிய தாவது:மத்திய
அரசு திட்டத்தில், ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளுக்கே ஆதார் பதிவு
நடக்கிறது. ஆனால், தமிழக அரசு, ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ஆதார்
எண் வழங்க, மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.
தமிழகத்தில் மட்டும் துவங்கியுள்ள இந்தத் திட்டத்தில், இனி
பிறந்த குழந்தைக்கும், ஆதார் எண் வழங்கப்படும். எதிர்காலத்தில், பிறப்பு
சான்றிதழுடன், ஆதார் எண் வழங்கும் திட்ட மும் அறிமுகமாக வாய்ப்புள்ளது என,
அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வயது குழந்தைகளுக்கான ஆதார்
குறித்த விபரங் களை,மாநகராட்சி மண்டல அலுவலகம், வருவாய் துறை அலுவலகம்
மற்றும் இ - சேவை மையங்களில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...