Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

           மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.
 
        சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் இயங்குகிறது பாலவித் யாலயா காது கேளாதோர் பள்ளி. இங்கு, காதுகேளாத குழந்தைகள்சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
           இதுகுறித்து அப்பள்ளியின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, முதல்வர் வள்ளி அண்ணாமலை, துணை முதல்வர் மீரா சுரேஷ் ஆகியோர் கூறிய தாவது:
பெரும்பாலும் குழந்தைகள் 3-வது மாதம் முதல் 4-வது மாதத்தில் குப்புறப் படுக்க ஆரம் பிக்கும். தலையைத் தூக்கி இங்கும் அங்கும் பார்க்கும். எப்போது நாம் அதன் பெயரை அழைக்கிறோமோ அப்போது அது ஆசையுடன் சத்தம் வரும் திசையை நோக்கி எட்டிப் பார்க்கும். முதலில் சத்தத்தை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும். அதன்பிறகு அந்தச் சத்தம்எங் கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்.பின்னர் சத்தத்தை வேறுபடுத்திப் பார்த்து, அதில் இருந்து ஓர் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். அதைத்தொடர்ந்து தானாக பேசும் கலையை குழந்தையே வளர்த்துக் கொள்ளும்.

ஆனால் இந்த திறமை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை காதுகேளாக் குறைபாடுடன் பிறக் கிறது. காது கேளாத காரணத் தால் பேசும் திறன் அந்தக் குழந் தைக்கு இருக்காது. இதை நாம் சிறுவயதிலேயே கண்டுபிடிக்க முடியும். குழந்தைப் பிறந்த உடன் பரிசோதித்துப் பார்க்கும்போது காது கேட்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம். மேலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்போதும் தெளிவாக உணர முடியும்.குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்பதை நாம் உணர்ந்த வுடன் கேட்கும் திறனைப் பரிசோதிக் கும் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதனைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைப் பிறந்து 3 முதல் 4 மாதங்களில் ஒரு தாய் தனது குழந்தையைக் கூப்பிடும்போது அது சத்தம் வரும் திசையை நோக்கி பார்க்கிறதா? அல்லது பார்க்காமல் இருக்கிறதா? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாக குழந்தையை காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது ஆடியோ நிபுணர்களிடம் கொண்டு செல்லவேண்டும். 3 வயதுக்குள் கண்டுபிடித்துவிட்டால் குழந்தை மிக விரைவிலேயே பேசும் திறனையும் கேட்கும் திறனையும் கற்றுக்கொண்டு மற்ற குழந்தை கள் போன்று இயல்புநிலையை அடைந்து இதர குழந்தைகளுடன் சேர்ந்துகொள்ளும்.காதுகேளாத குழந்தைக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவது மூலமாக அது சத்தத்தை உணர்ந்து கொள்ளும். ஆனால், குழந்தை தானாக பேசுவதற்குக் கற்றுக் கொள்ள தனியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்தச் சிறப்புப் பயிற்சியால், காதுகேளாத குழந்தை மற்றவர்கள் பேசுவதைப் போல் பேச கற்றுக்கொள்ளும். எங்கள் பள்ளியில் காதுகேளாத குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் இலவசமாக அளிக்கிறோம். பொது வாக, காதுகேளாத குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்கும் அனைத்துப் பள்ளிகளும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைத்தான் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் எங்கள் பள்ளியில், பிறந்தது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்கிறோம். இங்கு சேர குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் கூட சேர்த்துக் கொள்கிறோம்.

பெரியவர்கள் பேசுவதைக் கேட்கவும் பின்னர் அதற்கு ஏற்ப பதில் அளிக்கவும் இளம் பரு வத்தில் இருந்தே இந்தக் குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்க ‘தவானி’ என்ற முறையைப்பின் பற்றுகிறோம். இங்கு 3 முதல் 4 ஆண்டுகள் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மூலம் குழந் தைகள் வாசிக்கவும் எழுதவும் எண்கள் அடங்கிய கணக்குகளைப் போடவும் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் 5 முதல்6 வயதுக்குள் இந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்து பொது வான பள்ளிகளில் சேர்ந்துவிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive