மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி,
செப். 29-இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுப் பள்ளிக்கான
மாநில மேடை அமைப்பின் பொதுச் செயர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
"தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்' என்ற ஆவணத்தில்
கூறப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகளை திரும்பப் பெறக் கோரி, பொதுப்
பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, சமத்துவக் கல்விக் கான கூட்டமைப்பு ஆகியன
இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள், ஆசிரியர்களைப் பாதிக்கும் வகையில் உள்ள பல்வேறு இடர்பாடுகளைத்
திரும்பப் பெறக் கோரி, சென்னையில் செப்டம்பர் 29-இல் ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும்.
இதைத் தொடர்ந்து புது தில்லியில் நாடாளுமன்றம் தொடங்கும் வாரத்தில்
அனைத்துக் கட்சிகள் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கமும்,
ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் கருத்துகளை இன்னும்
வலிமையாக, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள்
விடுத்து, அவர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...