Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச 'லேப்டாப்' வினியோகத்தில் ரூ.242 கோடி முறையற்ற செலவு.

          தகுதியற்ற மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கிய வகையில், தமிழக அரசு, 242 கோடி ரூபாய் முறையற்ற செலவு செய்துள்ளது' என, மத்திய தணிக்கை துறை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

          தமிழகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. 2013 - 14ல், மத்திய தணிக்கை அறிக்கையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு, இலவச, லேப்டாப் வழங்குவதை தவிர்த்திருக்கலாம்' என, சுட்டிக்காட்டப்பட்டது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறை முதன்மை செயலரும், 'சுயநிதிப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தவறுதலாக வழங்கப்பட்டது' என, பதில் அளித்திருந்தார்.இதன்படி, 2011 - 12 மற்றும், 2012 - 13ல், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகளில், சுயநிதிப் பிரிவில் தகுதியற்ற மாணவர்களுக்கு, 242 கோடி ரூபாய் மதிப்பில், 1.61 லட்சம், லேப்டாப் வழங்கப் பட்டுள்ளது என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோட்டை விட்ட 'எல்காட்':
அதேபோல, 'எல்காட்' எனப்படும், தமிழ்நாடு மின் னணு நிறுவனம், தனக்கு சொந்தமான பொருளா தார மண்டலங்களில், குத்தகை வாடகை கட்ட ணங்களை முறையாக வசூலிக்காததால், 12.41 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள் ளது என்றும், தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதில், மேலும் கூறப்பட்டுள்ள தாவது: சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக் கான சிறப்பு பொருளாதார மண்டலங்களை, 1,588 ஏக்கரில் எல்காட் அமைத்துள்ளது. அவற்றை, 99 ஆண்டு குத்தகை அடிப்படையில், ஐ.டி., நிறுவனங் களுக்கு,வாடகைக்கு விட்டுள்ளது. டிட்கோ' எனப் படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தை பின்பற்றி, வாடகை வசூலிக்கப்படுகிறது. டிட்கோ நிறுவனம் குத்தகை வாடகை வசூலிக்க, 90 நாட்கள் அனுமதி அளித்து, அதன்பின், ஆண்டிற்கு, 15.5 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. எல்காட், 60 நாட்களுக்கு மட்டும் வாடகை தாரருக்கு அனுமதி அளித்தது. தாமத மாக செலுத்தப்பட்ட தொகைக்கு, வட்டியை வசூலிக்க வில்லை. இவ்வாறாக, 2010 மே முதல், 2014 செப்டம் பருக்கு இடைப்பட்ட காலத்தில், எட்டு குத்தகைதாரர் களிடம், 27.95 கோடி ரூபாய் குத்தகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து பேர், 502 நாட்கள் தாமதமாக குத்தகை செலுத்தினர்; அதற்கான, 1.59 கோடி ரூபாய் வட்டி வசூலிக்கப்படவில்லை. எட்டு குத்தகைதாரர்களிடம் இருந்து, 10.82 கோடி ரூபாய் நில மேம்பாட்டுக் கட்டணத் தையும், எல்காட் வசூலிக்காததால், 12.41 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive