Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

21ஆம் நூற்றாண்டிலும் தொடரும் குழந்தைத் திருமணம்!

       கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி டெல்லியில், சில்ட்ரன் ரைட்ஸ் அண்ட் யூ என்னும் தொண்டு நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தது. 
 
        அதில், கல்வி அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் 18 வயதுக்குக்கீழ் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும். இதன்மூலமாக, குழந்தைகள் சிறந்த கல்வியறிவைப் பெற முடியும். மேலும் நாட்டில் அதிகளவு நடைபெறும் குழந்தைத் திருமணத்தையும் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 45 லட்சம் சிறுமிகளுக்கு 18 வயதை அடையும் முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். இங்குதான் குழந்தைத் திருமணம் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது என்கிறது அந்த ஆய்வு. மேலும் உத்திரப்பிரதேசத்தில் மட்டுமே 13.5 லட்சம் குழந்தைத் திருமணம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 1.6 கோடி மக்கள் இதை தங்களின் பாரம்பரிய வழக்கம் என்று கூறி, சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்கின்றனர். மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கணவன், மனைவி இருவருக்குமிடையே நடக்கும் உடலுறவை பாலியல் பலாத்காரம் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளது. மேலும் 15வயதுக்குட்பட்ட தம்பதியரில், மனைவியின் விருப்பம் இல்லாமல்கூட உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்று மத்திய அரசு விளக்கமளித்தது. ஆனால் குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம். ஆனால் இது, நடைமுறையில் சாத்தியமாகவில்லை என்றும் அந்த தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 375, பிரிவு 2ன் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவிக்கும் கணவனுக்கும் இடையே உள்ள உடலுறவு பாலியல் பலாத்காரம் ஆகாது. இது, அவர்களுக்கிடையே பாதுகாப்பை உருவாக்கும் எண்ணத்துடன் கொண்டு வரப்பட்டது என்றது மத்திய அரசு.
இருப்பினும், 18 வயதுக்கு குறைந்து திருமணம் செய்தாலே அது குழந்தைத் திருமணம் ஆகும். க்ரை தொண்டு நிறுவனத்தின் மண்டல இயக்குநர் சோஹா மொய்த்ரா இதுகுறித்து கூறுகையில், குழந்தைத் திருமணம் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார். மேலும் வறுமை, கல்வியின்மை, கலாச்சாரம், பாதுகாப்பு போன்ற காரணங்களைக் காட்டி சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். குழந்தைத் திருமணம் அவர்களுடைய கல்வியுரிமையை மட்டும் பாதிக்கவில்லை, வன்முறையைத் தூண்டுகிறது. இந்தியச் சமூகத்தில் குழந்தைத் திருமணத்தை அழிக்கவல்ல ஒரே ஆயுதம் கல்வி மட்டும்தான்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive