பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 சதவீதம் பேர் பட்டப் படிப்பு (டிகிரி)
முடிக்காதவர்கள் என்பது என்.சி.இ.ஆர்.டி. ஆய்வு அறிக்கையில்
தெரியவந்துள்ளது.
2009 செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின் அடிப்படையில்,
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த 8-ஆவது ஆய்வு
அறிக்கையை என்.சி.இ.ஆர்.டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்)
தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, 12,99,902 பள்ளிகளில் 10,94,510 பள்ளிகள் கிராமப்புறங்களிலும்,
2,05,392 பள்ளிகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன. இவற்றில் 59 சதவீதம்
தொடக்கப் பள்ளிகள், 27 சதவீதம் நடுநிலைப் பள்ளிகள், 9 சதவீதம் உயர்நிலைப்
பள்ளிகளும், 5 சதவீதம் மேல்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
மொத்த பள்ளிகளில் 66 சதவீதம் அரசுப் பள்ளிகள், 14 சதவீதம் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், 7 சதவீதம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள், 13 சதவீதம் சுயநிதி தனியார் பள்ளிகள்.
ஆசிரியர்களின் தகுதிகள்: நாட்டில் 67,47,466 ஆசிரியர்கள் உள்ளனர். இது கடந்த 7 ஆவது ஆய்வு அறிக்கை எண்ணிக்கையை விட 22.01 சதவீதம் கூடுதலாகும்.
இவர்களில் தொடக்கப் பள்ளிகளில் 26,41,943 முழு நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 4.7 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புகூட முடிக்காதவர்கள்.
அதுபோல, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 15,44,322 முழுநேர ஆசிரியர்களில், 83.72 சதவீதம் பேர் மட்டுமே உரிய கல்வித் தகுதியும் பயிற்சியையும் பெற்றவர்கள். 13.06 சதவீதம் ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை மட்டும் பெற்றவர்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் முழு நேர ஆசிரியர்கள் 12,67,000 பேர் ஆகும். இவர்களில் 20.13 சதவீதத்தினர் பட்டப் படிப்புகூட முடிக்காதவர்கள். இந்த எண்ணிக்கை 7 ஆவது ஆய்வு அறிக்கையில் 12.03 சதவீதமாக இருந்தது.
அதே போன்று மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் 4,00,695 முழுநேர ஆசிரியர்களில் 24.56 சதவீதத்தினர் பட்டப் படிப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை மட்டும் பெற்றவர்கள். இதுவும் கடந்த முறையைவிட கூடுதலாகும். 7-ஆவது ஆய்வு அறிக்கையில் இந்த எண்ணிக்கை 18.83 சதவீதமாக இருந்தது.
தமிழகம் இரண்டாமிடம்:
பிளஸ் 2 வரையிலான மேல்நிலை வகுப்புகளில் மாணவிகள் சேர்க்கையில் 53.83 சதவீத சேர்க்கையுடன் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. 53.22 சதவீதத்துடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும், கேரளம் 52.85 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சேர்க்கையில் 52.86 சதவீதத்துடன் மேகாலயா முதலிடத்திலும், சிக்கிம் இரண்டாம் இடத்திலும், அஸ்ஸôம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நடுநிலைப் பள்ளி மாணவிகள் சேர்க்கையைப் பொருத்தவரை சிக்கிம் முதலிடத்திலும், மேகாலயா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இடைநிற்றல்: பள்ளி இடைநிற்றலில், ஐந்தாம் வகுப்பில் 15.84 சதவீத மாணவர்களும், 16.08 சதவீத மாணவிகளும் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். எட்டாம் வகுப்புப் பொருத்தவரை 13.42 சதவீத மாணவர்களும், 14.64 மாணவிகளும் இடைநிற்கின்றனர்.

புள்ளி விவரம் எங்கேயோ இடிக்குது.
ReplyDelete