உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், உள்ளாட்சி
பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. சமீபத்தில்,
மாநில தேர்தல் ஆணையம், 'அக்., 24ம் தேதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடத்தி
முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதன்படி, அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில
தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை தவிர, அனைத்து
மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக
நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், எவ்வாறு
நடைபெறுகின்றன என, மாநில தேர்தல் ஆணையர், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு
நடத்திஉள்ளார். இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்தல் தேதி எப்போது
அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினரிடம்
ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் வரும், 16 முதல், விருப்ப
மனு வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; அன்று பவுர்ணமி. மேலும்,
17ம் தேதி, புரட்டாசி பிறக்கிறது. எனவே, 16ம் தேதி, உள்ளாட்சி தேர்தல்
தேதிகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...