நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கமாக செப்டம்பர் 15-ந்தேதி தொடரும் இந்த பணிகள் இந்த முறை செப்டம்பர் 1-ந் தேதியே தொடங்கப்பட்டது.
அன்று மாநிலம் முழுவதும் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 5.81 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதை தொடர்ந்து செப்டம்பர் 30-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புகைப்படம் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் 11 மற்றும் 25-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
11-ந் தேதி நடந்த முதல் கட்ட முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சத்து 77 ஆயிரத்து 675 பேரும், 2-வது கட்ட முகாமில் பெயர் சேர்க்க 8 லட்சத்து 18 ஆயிரத்து 413 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதே போல பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும், முகவரி மாற்றவும் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 19 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெயர் சேர்க்க மட்டும் 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நேரடியாக விண்ணப்பம் பெறப்பட மாட்டாது.
இணையதளம் மூலம் பெறப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தேர்தல் துணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...