Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையை சேர்ந்த ஒருவர் 145 பட்டங்கள் பெற்றவர்!

     நாம் ஒரு டிகிரியை முடிப்பதற்கே ஒரு யுகத்தை கடப்பது போல் நினைப்போம். அப்படியும் முடித்தால், எத்தனை பேர் அரியர்ஸ் இல்லாமல் முடிக்க முடியும்? இங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் 145 கல்வி பட்டங்களை தன் கையில் சாதாரணமாக வைத்திருக்கிறார். 
 
          வாழ்க்கையில் பொருட்செல்வத்தை சேர்க்க ஆசைப்படுவோம். ஆனால், இந்த பேராசிரியர் கல்வி செல்வத்தை சேகரித்து வைத்துள்ளார். அவருடைய விசிட்டிங் கார்டு ஒரு புத்தகம் போல இருக்கும். இப்போது உங்களுக்கே புரியும் எத்தனை டிகிரி முடித்துள்ளார் என்று.

வடசென்னையைச் சேர்ந்தவர் வி.என்.பார்த்திபன். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். முதல் இளங்கலை பட்டத்தை கஷ்டப்பட்டு முடித்துள்ளார். பிறகு, முப்பது ஆண்டுகளாக கிட்டதட்ட 12 எம்.பில்., 9 எம்.பி.ஏ., 10 எம்.ஏ., 8 எம்.காம்., 3 எம்.எஸ்சி., 8 எம்.ஏ. சட்டம் என்று பட்டங்களை வரிசையாக வைத்துள்ளார்.
இதுபற்றி பார்த்திபன் கூறியது: “முதல் பட்டத்துக்கு பின்பு, நீதி துறையில் பணிக்குச் சென்றேன். மாற்றுச் சான்றிதழ் தேவைப்படாத இடத்தில் எல்லாம் ஒரே நேரத்தில் பல படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். கடந்த 30 ஆண்டுகளாக பரீட்சைக்குத் தயார் செய்தும், புது கோர்சுகளுக்கு விண்ணப்பித்தும் என் வாழ்க்கையை கழித்துள்ளேன். பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமையை தேர்வு எழுதவும், ஆராய்ச்சி சம்பந்தமான பேப்பர்கள் எழுதவும் செலவிட்டுள்ளேன். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பாடம் கற்பித்து வருகிறேன். படிப்பு என்பது மிக எளிது. படிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால், கணித பாடப் பகுதி மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதனால், அதன் மீது ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய வெற்றிக்கு முழு காரணம் என் மனைவி. படிப்பில் முழு கவனம் செலுத்துவதால்,குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியவில்லை. என் மனைவி எல்லாவற்றையும் பார்த்து கொண்டு, எனக்கு ஊக்குவித்தலையும் அளிக்கிறார். எனது மனைவி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரும் ஒன்பது டிகிரி வைத்துள்ளார்” என்று கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive