மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி
ரூபாயை, கர்நாடகா வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க வேண்டும்'
என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு
தெரிவித்து, செப்., 5 முதல், கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம், ஒரே நாளில் மட்டும், 60க்கும் மேற்பட்ட லாரிகளும்,
50க்கும் மேற்பட்ட பஸ்களும், 100க்கும் மேற்பட்ட பிற தமிழக வாகனங்களும்,
வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் நாசம் : லாரிகளில் இருந்த பொருட்கள் சாம்பலாகி
விட்டன. இன்சூரன்ஸ் மூலம், மிக குறைவான தொகையே கிடைக்க வாய்ப்புள்ளது. பல
ஆண்டுகளாக உழைத்து சேர்த்த சொத்தை, வன்முறை கும்பல் அழித்து விட்டது.
கர்நாடகாவில், வன்முறையை அரசும், போலீசும் வேடிக்கை பார்த்து உள்ளது.
கர்நாடகாவில், பஸ்கள், லாரிகள் மட்டுமின்றி, தமிழர்களின் பொருட்கள்,
உடமைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுஉள்ளன.
நிவாரண தொகை : இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட
வேண்டும். வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது, நிவாரண
நிதி வழங்கப்படுகிறது.
அதேபோல், கர்நாடகா கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள, லாரி, பஸ்,
வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு முழு நிவாரண தொகை வழங்க, பேரிடர் நிவாரண
நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட
வேண்டும். கர்நாடகாவில் இதே நிலை தொடரும் பட்சத்தில், அகில இந்திய மோட்டார்
காங்கிரஸ், பிற மாநில லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி,
கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பிற மாநில லாரிகளின் இயக்கத்தையும்
நிறுத்துவோம்.கர்நாடகா அரசு, கலவரத்தை தடுத்து நிறுத்தாத பட்சத்தில், அகில
இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
இன்று போராட்டம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன
பொதுச் செயலர் முருகன் கூறியதாவது:கர்நாடகாவில் நடக்கும் கலவரத்தை
கட்டுப்படுத்த வேண்டும். கர்நாடகாவில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
எனக் கோரி, தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள அத்திப்பள்ளியில், இன்று, காலை,
10:00 மணிக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், மறியல் போராட்டம்
நடக்கிறது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...