தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத்
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து,
தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.
ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள்,
பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை
எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, விடைத்தாள்கள் எண்ணிக்கை
பன்மடங்காக அதிகரிக்கின்றன. இவற்றை திருத்தி மதிப்பிட, பத்தாம்
வகுப்பிற்கு, 50 ஆயிரம்; பிளஸ் 2 விற்கு, 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை.
மறுகூட்டலில், பெரிய
அளவில் மதிப்பெண் வித்தியாசம், விடைத்தாளின், ஒரு பக்கத்தையே திருத்தாமல்
விடுவது போன்ற பிரச்னைகள் ஆண்டுதோறும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இதை
தவிர்க்க, விடைத்தாள் திருத்தும் பணியை, கணினி
மயமாக்குவது குறித்து தேர்வுத் துறை பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: முதற்கட்டமாக, பத்தாம் வகுப்பு விடைத்தாளை மட்டும் புதிய
நடைமுறையில் திருத்த ஆலோசிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்
விடைத்தாள் இம்முறையில் தான் திருத்தப்படுகிறது. இதன்படி, வினாத்தாள்
பக்கம் வாரியாக, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, தனி, 'போல்டர்' ஏற்படுத்தப்படும்.
திருத்தும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக, 'யூசர்நேம், பாஸ்வேர்டு'
வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்தபடியே மதிப்பீடு செய்யலாம்.
அதற்கான, 'ஆன்சர் கீ' யும், 'அப்லோடு' செய்யப்படும்.இப்பணிக்கு, குறைந்த
எண்ணிக்கையில் தான் ஆசிரியர் தேவை இருக்கும். வீட்டில் இருந்தே, கணினி
மூலம் மதிப்பீடு செய்யலாம். இதற்கு ஏற்ப, வினாத்தாள் மற்றும்
வினாக்களில் சில மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம்,
மதிப்பீடு துல்லியமாக இருக்கும். மறுகூட்டலில் மதிப்பெண் வித்தியாசம் போன்ற
பிரச்னை ஏற்பாடாது. விடைத்தாள் தேவைப்படும் மாணவர்
களுக்கு, 'ஆன்லைன்' மூலமே விடைத்தாள் பக்கங்களை அனுப்பி வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Computer kku teacher podatha arasu ithai ellam yocikuranga engaa valkaiye kannama poivitathu b.Ed with cs padichu
ReplyDelete