இது இணையவாசிகளுக்கான தீபாவளி சீசன். ரிலையன்ஸ் நிறுவனம், அதன் ஜியோ
சேவையின் மூலம் இந்தியாவின் மொபைல் கட்டணங்களை டரியல் செய்யப் இருக்கிறது.
ஜியோவின் அறிவிப்புப்படி, ஒரு ஜிபியின் விலை 50 ரூபாய்க்கும் குறைவாக மாறப்
போகிறது. ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே 70% வரை அவர்களது
டேட்டா பேக் ரேட்டுகளை குறைத்து இருக்கிறார்கள்.
4ஜியில் இப்படி, தனியார் நிறுவனங்கள் கலக்கிக்கொண்டு
இருக்க, பி.எஸ்.என்.எல்லும் அதிரடியில் இறங்க இருக்கிறது. வரும்
செப்டெம்பர் 9-ம் தேதி, பி.எஸ்.என்.எல் அன்லிமிடெட் BB 249 என்ற
திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் மூலம் 2MBps வேகத்தில் 300 ஜிபி
வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்க இருக்கிறார்களாம்.
இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் 300 ஜிபி டவுன்லோட் செய்தாலும், 1
ஜிபிக்காக அவர் செலவு செய்ய இருக்கும் 1 ரூபாய்க்கு குறைவாக இருக்கப்
போகிறது. ஆறு மாதங்களுக்குப் பின், இந்தத் திட்டத்தில், அவர்கள் விரும்பும்
வேறு திட்டத்திற்கும் மாறிக் கொள்ளலாமாம்
ரிலையன்ஸின் ஜியோ மொபைல் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பி.எஸ்.என்.எல்லின்
இந்தத் திட்டம் வர்த்தக மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்க
இருக்கிறது. ஆக, தனியார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை, தங்கள்
வசம் வைத்துக்கொள்ள பெரிய அளவில் போராட வேண்டியது இருக்கும்.
எது எப்படியோ, இததனை நாட்களாக டேட்டாவுக்கு அதிகப் பணம் வசூலித்துக்கொண்டு
இருந்த நிறுவனங்கள், இனி குறைவான விலைக்கு மாறுவார்கள். வாடிக்கையாளர்கள்
இது மகிழ்ச்சி சீசன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...