*VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்???*
*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*
*செல்ல வேண்டும் ????*
( 1 ) . முதலில் SMC க்கு என்று ஒரு சீல் - முத்திரை ( SEAL ) செய்ய வேண்டும்
.அந்த முத்திரை கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்
தலைவர் / நடத்துநர்
பள்ளி மேலாண்மைக்குழு
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
யா.ஒத்தக்கடை
மதுரை 625 107.
என்று உங்கள் பள்ளியின் பெயருடன் ( முத்திரை அல்லது சீல்) செய்து வைத்துக் கொள்ளவும்
( 2 ) VEC தீர்மான நோட்டில் ,
HM MEETING இல் கொடுக்கப்பட்ட தபாலின் , நடைமுறைகளை எழுதி ,
மேற்கூறிய காரணத்திற்காக VEC ACCOUNT ஆனது SMC ACCOUNT ஆக
பெயர்மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப் படுகிறது .
என எழுதி VEC உறுப்புனர்கள் அனைவரிடமும் கையொப்பம் பெறவும்.
( 3 ) பின்னர் அதே போல SMC தீர்மான நோட்டில் ,
சீலை ( முத்திரை) வைத்து
. HM MEETING இல் கொடுக்கப்பட்ட தபாலின் , நடைமுறைகளை எழுதி ,
மேற்கூறிய காரணத்திற்காக VEC ACCOUNT ஆனது SMC ACCOUNT ஆக
பெயர்மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப் படுகிறது .
என எழுதி SMC உறுப்புனர்கள் அனைவரிடமும் கையொப்பம் பெறவும்.
( 4 ) SMC தீர்மானத்தின் XEROX COPY எடுத்து வைத்துக் கொள்ளவும். வங்கிக்கு பெயர்மாற்றச் செல்லும் போது SMC தீர்மான XEROX கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
( 5 ) தலைமை ஆசிரியர் ( HM ) மற்றும் SMC தலைவருடைய *ஆதார் அட்டையின் XEROX COPY* Address proof க்கான கொண்டு செல்ல வேண்டும் .
(6) BANK PASS BOOK , Account Number தெரியுமாறு front page முதல் பக்க XEROX.
( 7 ) HM - தலைமை ஆசிரியர் , SMC தலைவரின் புகைப்படங்கள்
( 8 ) HM meeting இல் கொடுக்கப்பட்ட , பெயர்மாற்றம் செய்ய வங்கி மேலாளருக்கு எழுதப்பட்ட மாதிரிக் கடிதம் *படிவம் - 2*. ( ORIGINAL நீங்கள் நிரப்ப வேண்டும் )
( 9 ) வங்கியில் அவர்கள் கொடுக்கும் SPECIMAN SIGNATURE க்கான படிவம்
( HM + SMC தலைவர் ) இருவரும் SPECIMAN SIGNATURE போட்டு இப்படிவத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
*எனவே நீங்கள் வங்கிக்கு நீங்கள் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டியது*
( 1 ) HM Meeting இல் கொடுக்கப்கட்ட வங்கி மேலாளருக்கான மாதிரி கடிதம்
*படிவம் 2*( நிரப்பிய பின்)
( 2 ) SMC தீர்மான நகல்
( 3 ) ஆதார் அட்டை XEROX ( HM + SMC தலைவர் )
( 4 ) PASSBOOK XEROX ( front page XEROX )
( 5 ) வங்கியில் தரப்படும் ( SPECIMAN SIGNATURE படிவம் )
( 6 ) HM மற்றும் SMC தலைவரின் புகைப்படம் ( PHOTOS மூன்று )
மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் வங்கியில் VEC Account இல் இருந்து SMC ஆக பெயர் மாற்றம் செய்யும் போது , கொண்டு செல்ல அறிவுறுத்தப் படுகிறது
*குறிப்பு :*
*VEC ACCOUNT ஐ பெயர் மாற்றம் செய்த பிறகு , HM MEETING இல்*
*கொடுக்கப்பட்ட தபாலில், படிவம் - 1 என கொடுக்கப்பட்டுள்ள , படிவத்தை நிரப்பி*
*HM seal வைத்து கையொப்பமிட்டு , SSA அலுவலகத்தில் ஒப்படைக்கவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...