துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய்
உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் 1094 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு
ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத்தேர்வு நடந்தது.இத்தேர்வை 4
லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர்.
இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின்
தேர்வுக்கு12 ஆயிரத்து 337 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். விரி வாக
விடையளிக்கும் வகையி லான மெயின் தேர்வு சென்னை, கோவை, சிதம்பரம், மதுரை,
சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 மையங்களில் நேற்று
நடைபெற்றது.சென்னையில் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ காலனி
அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர்
அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 10 இடங்களில் தேர்வு நடந்தது. மெயின் தேர்வை
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் எழுதினர். 2 ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் தேர்வெழுத வரவில்லை. குரூப்-2 மெயின் தேர்வில் 80 சதவீதம்
பேர் கலந்துகொண்டதாகவும் 20 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் டிஎன்பிஎஸ்சி
அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...