Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை-அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.

           மனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பணி ஆணை பெற்ற காதல் தம்பதி சுரேஷ், வாசுகி ஆகியோரை படத்தில் காணலாம். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.
 
        குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் அருள்மொழி வழங்கினார். இவர்களில் 59 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவார்கள்.

இது குறித்துதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-குரூப்-1 தேர்வு 3 துணை கலெக்டர்கள், 33 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 33 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர்கள் ஆகிய பணியிடங்கள் கொண்ட 79 பணியிடங்களுக்கு குரூப்-1 முதல் நிலை தேர்வு 2014-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி நடந்தது. இதனை 70 ஆயிரத்து 547 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவு 2015-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி வெளியானது. இதில் 4 ஆயிரத்து 282 பேர் தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வு 2015-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இதனை 3 ஆயிரத்து 407 பேர் எழுதினர். தேர்வு முடிவு இந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியிடப்பட்டது. நேர்முகத்தேர்வு ஆகஸ்டு 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தது. இதில் 163 பேர் கலந்து கொண்டனர். மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் பட்டியல் 12-ந்தேதி வெளியானது. கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற 79 பேருக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். பணி ஆணை இதையடுத்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கும் பணி நியமன ஆணைகளை அருள்மொழி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதல் இடத்தை பிடித்த சி.வித்யா, 2-வது இடத்தை பிடித்த சி.ஜெயப்பிரித்தா, 3-வது இடத்தை பிடித்த டி.சுரேஷ் ஆகியோருக்கு துணை கலெக்டர் பணி ஒதுக்கப்பட்டது. துணை கலெக்டர் பணி ஆணை பெற்ற சி.வித்யா கூறுகையில், “விருதுநகரை சேர்ந்த நான் எம்.டெக். படித்தேன். 2013-ம்ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவு துறையில் சீனியர் ஆய்வாளராக பணியாற்றினேன். பிறகு குருப்-1 மெயின் தேர்வில் வெற்றி பெற்றேன். நேர்முகத்தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றேன். துணை கலெக்டராக பணியில் சேர்ந்து என்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவேன்” என்றார்.

மனிதநேய மையத்தில் படித்தவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேரில் 59 பேர் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயமையத்தில் படித்தவர்கள். அவர்களுக்கு சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி மனிதநேய மைய ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் கூறுகையில், “மனிதநேயமையத்தில் படித்து வெற்றி பெற்றவர்களில் 3 பேர் துணை கலெக்டர்கள், 32 பேர் துணை சூப்பிரண்டுகள், 18 பேர் வணிக வரித்துறை ஆணையர்கள், 6 பேர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்களாக பணி ஆணை பெற்றுள்ளனர். 23 வயது முத்து மாதவன் போலீஸ் துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்வாகி உள்ளார். மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்றவற்றுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. இங்கு படித்தவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 768 பேர் வெற்றிபெற்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்” என்றார். சேவை செய்வேன் சதீஷ்குமார்,போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பணி நியமன ஆணை பெற்றார். அவர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்தவர். மனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வை எழுதி வெற்றி பெற்றார். இவர் சொந்த ஊர் நாமக்கல். மனிதநேய மையத்தில் படித்து போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி ஆணை பெற்ற கல்பனா தத் தஞ்சை மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்தவர். பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு, எம்.பி.ஏ. படித்தார். கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய அவர் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மாவட்ட தாய்-சேய் நல சுகாதார அதிகாரிக்கான தேர்வில் மாநில அளவில் முதல் ரேங்க் எடுத்து பணியாற்றினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் போலீஸ் துணை சூப்பிரண்டு பணிக்கான ஒதுக்கீட்டில் பெண்களில் முதல் இடம் பெற்றுள்ளேன். பயப்படாமல் பிரச்சினைகளை சமாளித்து பொதுமக்களுக்கு என்னால் முடிந்த சேவை செய்வேன். பெண்ணால் சாதிக்க முடியாத துறையே இல்லை” என்றார். காதல் தம்பதி துணை கலெக்டராக பணிநியமனம் பெற்ற சுரேஷ் கள்ளக்குறிச்சி அருகே தலைவாசல் கிராமத்தை சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் படித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய கால்நடை உதவி மருத்துவர் தேர்வில் தேர்வாகி உதவி கால்நடை மருத்துவராக பணியாற்றினார். வணிக வரித்துறை உதவி ஆணையராக பணி நியமன ஆணை பெற்ற வாசுகியும், சுரேசும் கணவன்-மனைவி ஆவார்கள். வாசுகியும் கால்நடை மருத்துவம் படித்தவர். இவர்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மனிதநேய மையத்தில் படித்தனர். சுரேஷ் குரூப்-1 தேர்வை 3-வது முறை எழுதி தேர்வானார். வாசுகி முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive