ஒரு இரவுக் காவலர்/அலுவலக உதவியாளர்/பதிவறை எழுத்தர்/ஆய்வக உதவியாளர்/இளநிலை உதவியாளர்/உதவியாளர்/கண்காணிப் பாளர்/நேர்முக
உதவியாளர் ஆகிய பணிகளில் இருப்போரைத் தொடக்கக் கல்வி/இடைநிலைக்
கல்வி/மேல்நிலைக் கல்வி ஆகிய வெவ்வேறு நிர்வாகங்களுக்கு மாற்றிட முடியும்/
பதவி உயர்வு அளிக்க முடியும், என்கிற நிலை எதற்காக உருவானது?
ஒரு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரையும்
மாவட்டக் கல்வி அலுவலரையும் எவ்வாறு ஒரே நிலையினராகக் கருதி மாறுதல்/பதவி
உயர்வு வழங்கப்படுகிறது?
இங்கும் இப்பணிகளுக்கான, தகுதியுள்ள, மாறுதல்/பதவி உயர்வு வாய்ப்புகளை விசாலமாக்குவதே நோக்கமாக இருக்கமுடியும்.
தொடக்கக் கல்வி விதிகளின்கீழ் வரும் ஒரு
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், பள்ளிக் கல்வியின்கீழ் வரும் ஒரு
உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும்போது, இந்த விதி 9
எங்கே போகிறது?
இவ்விதியைக் கருத்தில்கொண்டால், மேல்நிலைக்
கல்வியின்கீழ் 5 ஆண்டுகள் பணிபுரிந்த மே.நி.ப. தலைமையாசிரியர் எவ்வாறு
மாவட்டக் கல்வி அலுவலராக முடியும்?
இப்போது பதவி உயர்வு பெற்றுள்ள 41 பேரில் உள்ள 20 மே.நி.ப. தலைமையாசிரியர்கள் மா.க.அலுவலர்களாகப் பெற்றுள்ள மாறுதல் செல்லுமா?
ஏற்கனவே இருந்த, 'பட்டதாரி ஆசிரியர்
உ.தொ.க.அலுவலராகும் வாய்ப்பும்' பறிபோய்விட்டது. ஆனால் AEEO மட்டும் High
School HM ஆகலாமாம். எத்தனை முரண்கள், எத்தனை இழப்புகள்?
பட்டதாரி/ப.உ.பெ. முதுகலை ஆசிரியருடைய பதவி
உயர்வு வாய்ப்புகளான, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி மற்றும்
அதன்வழி வரும் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி, ஆகியவற்றைத் தொடக்கக்
கல்விக்கும் மேல்நிலைக் கல்விக்கும் பங்குபிரித்துக் கொடுப்பதைக் கைகட்டி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன?
ஒரு நேரடி நியமன முதுகலை ஆசிரியர் மட்டும்,
மேல்நிலைக் கல்விப் பணியில் பல ஆண்டுகள் பணிபுரிந்தும், பிறகு சில ஆண்டுகள்
மே.நி.பள்ளித் தலைமை ஆசிரியராக வேறும் பணிபுரிந்துவிட்டு, பின் பள்ளிக்
கல்விப் பணியில் DEO/தொ.க.பணியில் DEEO ஆகிக்கொள்ளலாமா?
நீதிமன்றத்தில் சரியான/வலுவான வாதங்களை வைத்து உரிமையை மீட்டிட வேண்டாமா?
மிகவும் சரியான வாதம். பட்டதாரி ஆசிரியர்கள் விழித்தெழவேண்டும்
ReplyDeleteஅதேபோல் பட்டதாரி ஆசிரியராக 5 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு,PG,HIGH SCHOOL HM,HIGHER SECONDARY HM ,DEO, CEO என அடுத்தடுத்து அனைத்து பதவி உயர்வையும் அனுபவிப்பது மட்டும் என்ன நியாயம்?
ReplyDeleteசெந்தில்குமார் சார் நீங்கள் கேட்பது நியாயமே
ReplyDeletewelset
ReplyDeleteI worked as a BT for 13 yrs then how many years to work for your norms.
ReplyDelete