தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில்
உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி,
நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள்,
புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை
விதித்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்
பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது.
அந்த இடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே,
ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை
மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக
உள்ளதால், இந்த மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்ற ஆசிரியர்களும், தங்கள்
இடத்திற்கு, வேறு ஆசிரியர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்
குறிப்பிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...